வடக்கில் இன்று 9 பேருக்கு தொற்று!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4பேரும், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், வவுனியா செட்டிக்குளம் பகுதியில் ஒருவரும், காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here