பெண்களை பூனைக்குட்டிகளாக வளர்த்த ஆபாச சாமியாருக்கு 1,075 ஆண்டுகள் சிறை!

துருக்கியில் மத போதகர் ஒருவருக்கு 1075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டின் இஸ்தான்புல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

துருக்கியில் அங்காரா நகரத்தில் பிறந்தவர் பிரபல மத போதகர் அட்னான் அக்தார் (64).

இவர் ஏ9 என்ற ஆன்லைன் தொலைக்காட்சி சனலை நடத்தி வந்தார். அந்த சனலின் வாயிலாக மத பிரசாரம் செய்தார். இந்த நிலையில், அவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த 2018 ஆம் ஆண்டு அட்னான் அக்தாரும், அவருடன் தொடர்பில் இருந்த பெண்கள் உட்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு துருக்கி நீதிமன்றத்தில் கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் சிலருக்கு கருத்தடை மாத்திரைகள் கட்டாயப்படுத்தி வழங்கப்பட்டதாக அக்தார் மீது பெண் ஒருவர் குற்றம்சாட்டினார். அதனை உறுதி செய்யும் விதமாக அக்தார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது 69,000 கருத்தடை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகளிடம் அவர் கூறியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நீதிபதிகளிடம், பெண்கள் மீது எனக்கு அளவு கடந்த ஈர்ப்பு உள்ளது. அந்த அன்பு தான் மனித பண்பு. எனக்கு ஆண்மை அதிகம். அதனால், எனக்கு ஆயிரம் காதலிகள் உள்ளனர் என தெரிவித்து நீதிபதிகளை அதிர வைத்தார். மேலும், எப்போதும் தன்னை சுற்றியிருக்கும் பெண்கள் குறித்து தெரிவித்த அவர், ‘பூனைக்குட்டிகள்’ என தெரிவித்து, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

அவரது ஆசை வலையில் சிக்கிய பெண்கள் பலரும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளனர். மேலும், உடலுறவு கொண்ட பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை மாத்திரைகளை முழுங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், அட்னான் அக்தார் மீது பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் ராணுவ தகவலை உளவு பார்ப்பது போன்ற பிரிவுகளின் அடிப்படையில் துருக்கி நீதிமன்றம அக்தாருக்கு 1075 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here