கிளிநொச்சியில் வெள்ளத்தினால் 2,600 பேர் பாதிப்பு!

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில்
இன்றுவரை (14) 807 குடும்பங்களைச் சேர்ந்த 2600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகவும், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 262 குடும்பங்களைச் சேர்ந்த
935 பேரும், கண்டாவளையில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 736 பேரும்,
பூநகரியில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 263 பேரும், பச்சிலைப்பள்ளி
பிரதேசத்தில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 666 பேரும் வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொது மக்களின் தற்காலி மற்றும் நிரந்த வீடுகளுக்கு வெள்ள நீர்
புகுந்துள்ளமையால் அவர்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதோடு பலர்
இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளனர்.

பிரதேச செயலக ஊழியர்கள், இராணுவம் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில்
மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here