சிறுவர் இல்லத்தில் பல குழந்தைகள் துஷ்பிரயோகம்: கண்காணிப்பாளர் கைது!

Minor Rape. (File Photo: IANS)

அநுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்திலுள்ள அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளே துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றத்துடன் தொடர்புடைய 52 வயதான விடுதி கண்காணிப்பாளர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுவர் இல்லத்திலிருந்த 50 சிறுவர்களிடமிருந்து பொலிசார் அறிக்கை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அந்த சிறுவர் இல்லத்தில் குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பில் ஏராளம் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அனுராதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here