கொரோனா தொற்றிற்குள்ளான வைத்தியர் வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை: வடக்கில் அதிர்ச்சி சம்பவம்!

வவுனியா நகர்ப்பகுதியில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றை நடாத்திவரும் பிரபல வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று அண்மையில் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

எனினும் குறித்த வைத்தியர் வவுனியாவில் உள்ள தனது வீட்டிலேயே 3 நாட்கள் தங்கியிருக்கிறார். வைத்தியத்துறையில் செல்வாக்கான ஆள் என்ற காரணத்தினால் அவர் கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்படாமல் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

ஏனெனில், அவருக்கு பின்னர் தொற்றிற்குள்ளானவர்கள் வைத்தியசாலைகளிற்கு அனுப்பப்பட்டு விட்டனர். வர்த்தக நிலையங்களில் தொற்றுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்கள் உடனடியாக சிகிச்சை நிலையங்களிற்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். எனினும், 70 வயதான இந்த வைத்தியர் தொடர்ந்தும் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

இதனால், சிகிச்சை நிலையங்களில் இடநெருக்கடியால் இன்னும் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பவில்லையென் தர்க்கம் பொருத்தமற்றது, வைத்தியத்துறையில் செல்வாக்கினால் வழங்கப்பட்ட சலுகையாகவே இதனை கருத வேண்டும் என பிரதேசவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

வுனியா நகரில் தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் நகரம் முடக்கப்பட்டுள்ளதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக பல தரப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த புதிய தகவல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here