தைப்பொங்கலில் அவதானமாக இருங்கள்!

நாளை 14 ஆம் திகதி வரவுள்ள தைப்பொங்கல் தினத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு செல்லுதல், புது ஆடைகள் வாங்குதல், ஆபரணம் வாங்குதல் மற்றும் வழிப்பாட்டு தலங்களுக்கு செல்லுதல் ஆகிய வழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்று வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் அறிவுறுத்தியுள்ளார்.

இம்முறை இந்த தைப்பொங்கலை வீடுகளில் இருந்தவாறே கொண்டாடுவதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களது இரத்த உறவுகளையும் மற்றும் நண்பர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

அத்துடன் ஒன்றாக கூடுதல், முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லுதல் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

இந்த நோயானது யாரையும் தாக்க வல்லது. வயது முதிர்ந்தவர்கள், நீரிழிவு நோய்வுள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு பாரிய ஆபத்தை விளைவிக்கவல்லது.

ஒவ்வொரு வீடுகளிலும் மேற்படி ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய உறவினர்கள், நண்பர்களது உயிர்களை கொரோனா தொற்றாது பாதுகாக்க வேண்டும் என்றும் என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள கொரோனா வைரஸ் என்றும் மிகப்பெரிய தொற்று நோயை முறியடிக்க அரசாங்கம், சுகாதார சேவையினர், முப்படையினர் மற்றும் இலங்கை மக்கள் அனைவரும் போராடுகின்றனர் என்றும் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here