அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கருத்து ஓவிய கண்காட்சி பேரணி!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கருத்து ஓவிய கண்காட்சி கண்டன பேரணி போராட்டம் யாழ் நகரில் இன்று இடம்பெற்றது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை இக்கண்காட்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெற்கில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போன்று சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஆகிய இரண்டு படங்களிலும் தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் ஒன்றுசேர்ந்து செயற்பட்டது போன்று அரசியல் கைதிகளின் விடயத்திலும் அனைவரும் ஒருமித்து செயற்பட்டு அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here