வடக்கிற்கு புகையிரதத்தில் வரும் பயணிகள் சுகாதார திணைக்களத்திற்கு தெரியப்படுத்தவும்

வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வட
மாகாணத்திற்கு கொரோனா ஆபத்து பிரதேசங்களிலிருந்து வரும் பயணிகள்
அந்தந்த பிரதேசங்களில் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை
மேற்கொள்ள வேண்டும் வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.

புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள்
புகையிரதங்களில் கொரோனா ஆபத்தான பிரதேசங்களில் இருந்து வருகின்றமைக்கான சாத்தியங்கள் காணப்படுவதனால் அவ்வாறு வருகின்றவர்களை தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனை மேற்கொள்ள போன்ற நடவடிக்களை எவ்வாறு மேற்கொள்ளவுள்ளீர்கள் என வடக்கு சுகாதார பணிப்பாளரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புகையிரதம் மூலம் வடக்கிற்கு புகையிரதம் மூலம் வருகின்ற பயணிகள்
தங்கள் தங்கள் இடங்களுக்கு வந்த பின்னர் உடனடியாக அந்தந்த பிரதேசத்தில்
உள்ள சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறும் அல்லது பொது மக்கள் இவ்வாறு
வருகின்றவர்களின் தகவல்களை சுகாதார பிரிவுக்கு அறிவிக்குமாறும் வடக்கு
மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். முக்கியமாக கொரோனா ஆபத்து வலயங்களிலிருந்து வருகின்றவர்களை சமூக அக்கறையோடு செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here