முள்ளிவாய்க்காலுக்கு மட்டும் தூபி வேண்டாம்; பொதுத்தூபி அமைப்போம்: ஈ.பி.டி.பி!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு மட்டுமல்லாமல், இதுவரை உயிரிழந்த அனைவருக்குமான நினைவுத்தூபியையே யாழ் மாநகரசபை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி வலியுறுத்தியுள்ளது.

யாழ் மாநகரசபை அமர்வில் இன்று, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு.

அந்தவகையில் யாழ் பல்கலைக்களக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராடிய விமலேந்திரன் உள்ளிட்ட மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் எனவும் தமது கட்சியின் கருத்தினை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து முதல்வர் சபை அமர்பை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து நிமிடத்தின் பின்னர் ஏனைய விடையங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சபை அமர்பு ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் நடைபெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here