கிராமசேவகர் மீது தாக்குதல்!

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் கிராம உத்தியோகத்தராக கடமை புரியும் உத்தியோகத்தரே தாக்குதலுக்குள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் பகிர்தளிக்கப்பட்ட போது வெள்ளத்தால் பாதிப்படையாத பகுதியைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட குழுவினர் தங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லை என்று கூறி தன்னைத் தாக்கியதாக குறித்த கிராம உத்தியோகத்தர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் வைத்தே மாலை 6.30 மணியளவில் குறித்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாக அவர் மேலும் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்ட குழுவினரை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள வாழைச்சேனை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here