கல்முனை வாகன விற்பனை நிலையம் மீதான துப்பாக்கிச்சூடு பற்றிய விசாரணை ஆரம்பம்!

அம்பாறை – கல்முனை பிரதான வீதியில் தனியார் சொகுச வாகன விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை (11) அதிகாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன.அதிகாலை 3.00 மணியளவில் இந்தச் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னியக்க துப்பாக்கி கொண்டு இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் சில வாகனங்களுக்கும் விற்பனை நிலைய கண்ணாடிகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான காட்சி அருகில் இருந்த சிசிரிவி கமெமராவில் பதிவாகியுள்ளதாகவும் சாதாரணமாக நடந்துவரும் ஒருவர் உரப்பைக்குள் இருக்கும் துப்பாக்கியைக் கொண்டு சுடுவது அதில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்த நபர் தொடர்பிலோ அல்லது துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தொடர்பிலோ உறுதியான தகவல்கள் வெளிப்படுத்தப்படாத நிலையில்,மேலதிக விசாரணைகள் அறிவியல் தடயங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here