கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக போலியான முறைப்பாட்டுக்
கடிதங்கள் மாகாணத்திற்கு அனுப்பபட்டுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக நன்மதிப்போடு
இருக்கின்றவர்களின் பெயரில் அனுப்பட்ட கடிதங்களே தொடர்பில் உண்மை
நிலவரம் தெரியவந்துள்ளது.
ஆதாவது திடீர் மரணவிசாரணை அதிகாரியும், ஆயுர்வேத வைத்தியருமான க.
திருலோகமூர்த்தியின் பெயரில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக
எழுதப்பட்ட முறைப்பாட்டுக் கடிதம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு
திருலோகமூர்த்தி அவர்களை மாகாண கல்வி அலுவலகத்திற்கு வருகை தருமாறு
அனுப்பட்ட கடிதம் அவருக்கு கிடைத்தப் பின்னரே அவரது பெயரில் போலியாக
கடிதம் அனுப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அவர் நேரடியாக வலயக் கல்விப் பணிப்பாளரை சந்தித்து தான்
அவ்வாறு ஒரு கடிதத்தை அனுப்பவில்லை என்றும் தனது பெயரில் போலியாக
அனுப்பட்டுள்ளது தனக்கும் இக் கடிதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை
என்றும் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இதனைத் தவிர ஓய்வுப்பெற்ற அதிபர் முருகானந்தனின் பெயரிலும் வலயக் கல்விப்
பணிப்பாளருக்கு எதிராக அனுப்பட்ட போலியான கடிதம் தொடர்பில் அவரும் தனது
அதிருப்தியை வெளியிட்டதோடு, தவறான தகவல்களை உள்ளடக்கி தனது பெயரில்
போலியாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக கடிதம் அனுப்பட்டுள்ளது
என்றும் இதனை தான் கல்விப் பணிப்பாளாரிடம் நேரடியாகச் சென்று
தெரியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட இலாபங்களுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் சில அமைப்புகளில்
தொடர்ச்சியாக பிரதிநிதிகளாக இருந்து வரும் நபர்களே கல்விப்
பணிப்பாளருக்கு எதிராக இந் நடவடிக்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்.