இந்திய நிதியுதவியில் யாழில் அமையும் கலாச்சார நிலையத்தையும் குறிவைக்கும் கோட்டா அரசு: நிராகரித்த மணிவண்ணன்!

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மத்திய நிலையத்தை, மத்திய அரசிடம் ஒப்படைக்கும்படி மத்திய அரசு கோரியுள்ளது. எனினும், யாழ் மாநகரசபை அதை நிராகரித்துள்ளது.

கொழும்பில் இன்று நடந்த உயர்மட்ட சந்திப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன்,  வடக்கு ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு பிரதம செயலாளர் பத்திநாதன் மற்றும் பிரதமரின் பிரதம செயலாளர் காமினி செனரத், இலங்கைக்கான இந்தய துணைத்தூதர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது, யாழில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மத்திய நிலையத்தை பராமரிக்கும் வலு மாநகரசபைக்கு இருக்காது. எனவே அதனை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் அதை நிராகரித்துள்ளார்.

கலாச்சார நிலையத்தை பராமரிக்கும் வலு, யாழ் மாநகரசபைக்கு உள்ளது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here