பிள்ளையான் அண்ணன் காப்பாற்றுவாரம்: ஓசி வாகனத்தில் ஏசி போட்டபடி சுற்றித்திரியும் முன்னாள் தவிசாளர்!

பதவி வறிதாக்கப்பட்ட பின்னரும் வாழைச்சேனை பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தில் ஓசியாக ஏசி போட்டபடி முன்னாள் தவிசாளர் சோபா ரஞ்சித் சுற்றித் திரியும் அதிர்ச்சி சம்பவம் நடந்து வருகிறது.

முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 13 உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களின் அதிகாரங்களை வறிதாக்கி, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் EP/14/legal/AB/2021 எனும் இலக்கமிடப்பட்டு கடிதம் 5.1.2021ஆந் திகதி உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உதவியாணயாளரால் தனது அதிகார எல்லைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தொலைநகல் மூலம் தவிசாளர்களின் அதிகாரம்த்து வறிதாக்கி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித்தும் தனது தவிசாளர் பதவியை இழந்தார்.

எனினும், அவர் தவிசாளர் பதவிக்குரிய வரப்பிரசாதங்களை சட்டவிரோதமாக அனுபவிக்கிறார்.

சபைக்குச் சொந்தமான EP KE 8134 எனும் இலக்கமுடைய land cruiser ரக வாகனத்தை முறையற்ற முறையில் தனது சொந்த தேவைக்காக பயன்படுத்துவது,  பிரதேச சபை ஊழியர்களை தனது கட்டளையை நிறைவேற்றுமாறு அச்சுறுத்துவது, முறையற்றமுறையில் காசோலைகளை பயன்படுத்த முனைவதும், அலுவலக வளங்களை துஷ்பிரயோகம் செய்வதுமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.

தனற்கு எதிராக அமுக்கப்படவுள்ள விசாரணை குழுவில் தனக்குச்சாதகமாகத்தான் தீர்பு வரும் எனவும் இதற்கான ஒழுங்கை அண்ணன் (பிள்ளையான்) செய்திருப்பதாக கூறி வருவதாகவும் நம்பத்தகூந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது

எனவே அதிகார துஷ்பிரயோககத்தை கண்டும் காணமல் இருக்கும் மேல் அதிகாரிகளின் நடஹடிக்கைகளிலும் சந்தேகம் ஏற்பட்டினுப்பதாகவும் விசாரணை திருப்திகரமாக நடைபெற வாய்புள்தா என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here