டிக்கோயா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட 15 பேர் தனிமைப்படுத்தல்!

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட 15 பேர் சுய தனிமைப்படுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி COVID-19 தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

15 ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஹட்டனில் வசிப்பவர் ஜனவரி 8 ஆம் திகதி வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு சென்றார். அதைத் தொடர்ந்து அவர் கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தன் பின்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் மூலம் அவர் தொற்றிற்குள்ளானது தெரிய வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here