சிங்களவர்களால் கடத்தப்பட்ட 6 தமிழர்களும் பிணையில் விடுதலை!

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணைப் மேய்ச்சல்த் தரைப்பகுதியில் நேற்று முன்தினம் சிங்களவர்களால் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான ஆறு பண்ணையாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டள்ளனர்.

அவர்களை மகா ஓயா பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நேற்று தெஹியத்தகண்டி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

அவர்களை பிணையில் விடுவித்த நீதிவான், வழக்கை மார்ச் 10ஆம் திகத வரை ஒத்திவைத்தார்.

இதேவேளை கடத்தலில் ஈடுபட்ட சிங்களவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

தாக்குதலிற்குள்ளாகி காயமடைந்த 6 பண்ணையாளர்களும் மாவடிவேம்பு வைத்தியசலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here