‘அவருடன் பழகியது உண்மைதான்’… நடிகை நிலானி தற்கொலை முயற்சி!

நடிகை நிலானி உதவி இயக்குனர் லலித்குமாருடன் நெருங்கி பழகி வந்த நிலையில் லலித்குமார் திருமணம் செய்துக்கொள்ள சொல்லி மிரட்டுவதாக கடந்த வாரம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் எச்சரித்ததால் மறுநாள் லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

இதில் நிலானி லலித்குமாரை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், பணத்தை கறந்துவிட்டு ஏமாற்றியதாகவும், போலீஸ் தேடுவதை அறிந்து தலைமறைவாக உள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனால் நிலானி மறுநாள் காவல் ஆணையர் அலுவலகம் வந்து தன்னைப்பற்றி தவறாக செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னைப்பற்றி ஊடகங்களிலும், வலை தளங்களிலும் அவதூறாக வெளியிடுகிறீர்கள்? எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறது அவர்கள் எதிர்காலம் கருதி பேசாமல் இருந்தேன், என்னை இப்படி அபிராமியுடன் ஒப்பிட்டு எழுதுகிறீர்களே என்று கதறி அழுதார்.

“என் கணவர் எங்களை நிராதரவாக விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார். நான் சீரியல் நடிகை என்றுதான் பெயர். என்னிடம் ஒரு கார் கூட கிடையாது என்று தெரிவித்தார். காந்தி லலித்குமாருடன் நான் திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் பழகியது உண்மை. நான் அதை மறுக்கவில்லை.

ஆனால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததும் பல பெண்களை ஏமாற்றி பணம் பிடுங்கியதும் தெரிய வந்தது. இதைப்பார்த்ததும் நான் அவரை திட்டி வீட்டை விட்டு விரட்டினேன். ஆனாலும் என்னை விடாமல் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தார். போட்டோக்களை வெளியிடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்து தாலிக்கட்ட முயற்சித்தார்.

அவருடைய டார்ச்சரால் நானே கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன். லலித்குமார் ஒரு சைக்கோ, அவரிடமிருந்து விலக நான் போராடியது எனக்குத்தான் தெரியும். இதில் நான் எங்கே இவர் மரணத்திற்கு காரணமானவள். எந்த வகையில் நான் இதில் பொறுப்பாக முடியும் சொல்லுங்கள்.

பெண்கள் விஷயத்தில் தவறாக நடக்கும் ஒருவர் உடன் என்னால் எப்படி வாழ முடியும். பத்து வயதில் ஒரு பெண் குழந்தையை வைத்துள்ளவள் எப்படி ஏற்றுக்கொள்வேன். என்னை அபிராமிக்கு இணையாக என்னை ஒப்பிட்டு போடுகிறீர்களே சோஷியல் மீடியாவில் எப்படி இவ்வாறு தோன்றுகிறது“ என்று கதறினார்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக மன உளைச்சலால் பதற்றத்துடன் காணப்பட்ட அவர் இன்று பூச்சி மருந்தை குடித்தார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தவர் மீட்டு கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here