யாழ்ப்பாணமும் முற்றாக முடங்கியது!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் கட்சிகள் , மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால் கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்திற்கும் யாழ்ப்பாண மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.

தனியார் போக்குவரத்து சேவை இடம்பெறவில்லை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அரச பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

அத்தோடு பாடசாலையின் கல்வி செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here