தமிழ் தேசிய கூட்டமைப்பின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிசிஆர் சோதனைக்கு உள்ளாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர், அவருடன் தொடர்பிலிருந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிசிரிவி கமராவின் உதவியுடன், ஹக்கீமுடன் தொடர்பிலிருந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை பிசிஆர் சோதனைக்கு உள்ளாகும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள சக்தியின் கயந்த கருணாதிலக, தலதா அத்துகோரள ஆகியோரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரே தனிமைப்படுத்தப்படவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here