கொவிட் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடையும் என்னும் அச்சத்தில் தொடரப்பட்ட வழக்கு!

அம்பாறை மாவட்ட பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து எமது பிரதேசத்தில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதனைத் தடுக்க மன்றின் கட்டளையைப் பெறுவதற்குமாக கடந்த 2020.12.21 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு (04) ஆம் திகதி எடுக்கப்பட்டு மீண்டும் இம்மாதம் 26 ஆம் திகதிவிசாரணைக்காக எடுக்கப்படும்

என்று  நீதிமன்ற நீதிவான் எம்.ச்.முஹம்மத் ஹம்ஸா கட்டளை பிறப்பித்துள்ளார்.  இந்த வழக்குத் தாக்கலை பாலமுனை ஊர்மக்கள் சார்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார், எஸ்.ஆப்தீன், ஏ.எல்.ஹஸ்மீர், பி.எம்.ஹுஸைர் அடங்கிய ஐந்து பேரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் பிரதிவாதிகளாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் மற்றும் குறித்த வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.ஜே.எம்.நௌபல் ஆகிய பதவி நிலை அதிகாரிகளுக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.குறித்த பதவி நிலை அதிகாரிகளுக்கு எதிராக பதியப்பட்ட குறித்த வழக்கு நேற்றைய தினம் 04 ஆம் திகதி நீதிமன்றில் எடுக்கப்பட்டு, குறித்த வழக்கை இம்மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்படும் என்று  நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முஹம்மத் ஹம்ஸா கட்டளை பிறப்பித்துள்ளார்.

பாலமுனை ஊர்மக்கள் சார்பில், குரல்கள் இயக்கத்தின் 5 சட்டத்தரணிகளும், பிரதிவாதிகள் சார்பில் 3 சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு பிரதிவாதிகள் 4 பேரும் நீதிமன்றுக்கு ஆஜராகியிருந்தனர்.

பாலமுனை ஊர்மக்கள் சார்பில் வழக்குத் தாக்கல் செய்தவர்களில் ஏ.எல்.ஹஸ்மீர் சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here