மழைக்கு ஒதுங்கவும் இடமின்றி மாணவர்கள் போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் நுழைவாயிலிற்கு அருகில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களின் நிலை இது.

இன்று மாலை திடீரென மழை பெய்ததால் மாணவர்களிற்கு பாதுகாப்பான தங்குமிடம் இருக்கவில்லை.

மாலையில் பந்தல் அமைக்க முயற்சிக்கப்பட்டது. தகரப்பந்தல் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்ட போது, பொலிசார் அந்த இடத்தில் அதை இறக்க அனுமதிக்கவில்லை.

இதன் பின்னர் மாணவர்களிற்கு பந்தல் அமைத்துக் கொடுக்க எந்த தரப்பினரும் முயலவில்லை.

முறையான தங்குமிடமின்றி இன்றைய இரவை மாணவர்கள் கழிக்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here