காரணமேயில்லாமல் தற்கொலை செய்த காயத்திரி!

சென்னையில் காரணமே இல்லாத நிலையில், பட்டதாரி இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மேடவாக்கம், கலைஞர் நகர், அம்பேத்கர் குடியிருப்பு, 2- வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரின் மனைவி பிரீத்தி. இந்த தம்பதிக்கு கவுசல்யா என்ற மகள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் உடல் நலக்குறைவாக சில காரணமாக இறந்துவிட்டார். தாயும் மகளும் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். பயோகெமிக்கல் படித்த கவுசல்யா பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக, சென்னை திரும்பிய அவர் தற்போத வீட்டில் இருந்தபடி பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், தன் வீட்டில் உள்ள அறையில் திடீரென்று துாக்கிட்டு கவுசல்யா தற்கொலை செய்துக் கொண்டார். ஏற்கெனவே, கணவர் இழந்த நிலையில் மகளை பறிகொடுத்த தாயார் ப்ரீத்தி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கவுசல்யாவுக்கு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லப்படுகிறது. காதல் விவகாரம் எதிலும் அவர் சிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனாலும், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதானால், பணியில் ஏதும் பிரச்னை இருந்ததா அல்லது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்கிற கோணக்கில் விசாரித்து வருகின்றனர்.

தற்போது, கவுசல்யாவின் செல்போனை கைப்பற்றி போன் அழைப்புகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். கவுசல்யாவின் தோழிகளிடத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here