தொற்று எண்ணிக்கை 47,000 ஐ கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,000 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 251 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,031 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 251 பேரும் மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.

இதேவேளை, குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 40,000 ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 656 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

4 வெளிநாட்டினர் உட்பட 6,492 நபர்கள் தற்போது நாடு முழுவதும் 67 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் 671 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here