கல்முனையில் தொற்று 900ஐ தாண்டியது

கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 903ஆக அதிகரித்தள்ளதாக, கல்முனை சுகாதாரப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இப்பிராந்தியத்தில் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 863 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் அக்கரைப்பற்று – 309, கல்முனை தெற்கு – 211, பொத்துவில் – 77, அட்டாளைச்சேனை – 88, சாய்ந்தமருது – 54, ஆலையடிவேம்பு – 36, இறக்காமம் – 24, சம்மாந்துறை – 27, கல்முனை வடக்கு – 17, திருக்கோவில் – 15, நிந்தவுர் – 13, காரைதீவு – 14, நாவிதன்வெளி – 14 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சாய்ந்தமருது பிரதேசத்தில் மீனவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here