அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை!

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தெரிவித்து இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன்னார் சமூக பொருளாதார
மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு
இன்று காலை 11 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை வேண்டிய பிரார்த்தனை வாரம் இடம்பெற்று
வரும் நிலையில் குறித்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த அரசியல் கைதி ஒருவரின் தாயார் குறிப்பிடுகையில்,
நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக எமது பிள்ளைகள் சிறையில் வாழ்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றும் அபாயமான நோயாக காணப்படுகின்றது. நாளாந்தம் இறப்பது தொடர்பான செய்திகளே எமக்கு கிடைக்கின்றது. இந்த நோயினை கருத்தில் கொண்டேனும் எமது பிள்ளைகளை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது பிள்ளைகளின் விடுலையை வேண்டி இன்று பலரும் இணைந்து கோரிக்கை விடுக்கின்றனர். அனைவரினதும் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிமடுத்து, எமது பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின்
பிரதிநிதி ஜாட்சன் குறிப்பிடுகையில்,

இலங்கையில் தற்போது சிறைகள் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வகையில் அரசியல் கைதிகள் விடுதலைக்கான பிரார்த்தனை வாரமாக
கடைப்பிடிக்கப்படுகின்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி பல்வேறு
கவன ஈர்ப்புக்களை முன்னெடுத்த வருகின்றோம். அதற்கு அமைவாக் இந்த ஊடக
சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை
செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எதிர்ரும் தை
பொங்கலிற்கு முன்னராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் கோரிக்கையை முன்வைக்கின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கைதியாக உள்ள குடும்பங்கள் பெரும் சவால்களை எதிர் கொள்கின்றனர்.
அவர்களின் குடும்ப தலைவர் இல்லாமையினால் அவர்கள் படும் துன்பங்கள்
அதிகம். இவ்வாறான நிலையை கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்தீர்கள்.
அனுபவங்களை கடந்து வந்த நீங்கள் இவ்வாறு பாதிக்கப்படும் அரசியல்
கைதிகளின் குடும்பத்திற்கு விடுதலையை கொடுப்பீர்கள் என நம்புவதாகவும்
அவர் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here