யாழில் ரௌடிகள் வீடு புகுந்து அட்டகாசம்!

உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பல் நேற்று (07) இரவு 9.30 மணி அளவில் மேற்கொண்டுள்ளது.

5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட குழு முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட உடமைகளைத் தாக்கிச் சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்து வாடகை வீடு எடுத்து நீண்டகாலமாக வசிக்கும் தாயும் மகனும் எந்தவொரு பிரச்சினைக்கும் செல்வதில்லை என்று அயலவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய கும்பலும் தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தாமல் அச்சுறுத்தும் வகையில் உடமைகளைச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here