‘ஏமாற்ற மனமில்லை; இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்தேன்’: தாராள பிரபு!

உறவினர்கள் புடைசூழ ஒரே நேரத்தில் இரு காதலிகளையும், இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்துகொண்டு மணமகன் சத்தீஷ்கரை சேர்ந்த சாந்து என்பது தெரியவந்துள்ளது.

இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சுந்தரி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பிறகு சில மாதத்தில் ஹசீனா என்ற பெண்ணையும் தான் காதலிப்பதாக கூறி அவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதனால் சாந்து – சுந்தரி – ஷசீனா ஆகிய மூவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து ஓராண்டுக்கு பிறகு திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி சாந்து இரு காதலியையும் கரம்பிடித்துள்ளார்.

இவர்கள் திருமணத்தில் மணமகள்களின் குடும்பத்தினர், மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் என சுமார் 600 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

காதலித்த இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டு உள்ளேன்; இருவரையும் ஏமாற்ற மனமில்லை என்று மணமகன் சாந்து பேட்டியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here