நேற்று 532 தொற்றாளர்கள்!

நாட்டில் நேற்று 532 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இதில், 432 நபர்கள் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். சிறைச்சாலைகளுக்குள் இருந்து 93 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, நாட்டில் பதிவான தொற்றுநோயார்களின் எண்ணிக்கை 46,780 ஆக அதிகரிக்கிறது.

நேற்று 638 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,661 ஆக அதிகரித்துள்ளது.

4 வெளிநாட்டினர் உட்பட 6,893 நபர்கள் தற்போது நாடு முழுவதும் 66 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 747 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

நேற்று மேலும் மூன்று  மரணங்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் கொரொனா மரணங்களின் எண்ணிக்கை நேற்று 222 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here