பிணை கோரி தமிழ் அரசியல் கைதி சிறைக்குள் உண்ணாவிரத போராட்டம்!

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் (64) என்பவர், தனக்கு பிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி நேற்று 6 ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தனது மேன்முறையீட்டு வழக்குகள் தொடர்பாகவும் தனது உடல் நிலை தொடர்பாகவும் குறிப்பிட்டு கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி சிறைச்சாலை ஆணையாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தான் நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பும் மேலதிக வைத்திய சிகிச்சையும் இல்லாமல் தான் தொடர்ந்தும் சிறைக்குள் அடைபட்டிருப்பதில் அர்த்தமில்லை இதனால் தான் உடல் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மேற்படி தனது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 6 ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை சிறையில் இருந்து ஆரம்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here