திருமணமான 10 நாளிலேயே ஏன் விவாகரத்து?: 6 வருடங்களின் பின் வாய் திறந்த ரம்யா!

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற தொகுப்பாளர்கள் சமீபகாலமாக கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே விவாகரத்து பெறுவது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் விஜய் டிவியில் அந்த மாதிரி சர்ச்சைகள் ஏராளம்.

விஜய் டிவி தொகுப்பாளினியாக இருந்த திவ்யதர்ஷினி என்கிற டிடி விவாகரத்து பெற்றார். ஆனால் அவரைவிட வேகமாக திருமணமான வெறும் பத்தே நாளில் விவாகரத்து பெற்றுக் கொண்டு வந்தது விஜய் டிவி ரம்யா தான்.

2014 ஆம் ஆண்டு ரம்யா அபராஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரம்யாவுடையது காதல் திருமணம் கிடையாது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு முறையாக நடந்த முதல் கல்யாணம். ஆனால் திருமணமான அடுத்த பத்தாவது நாளே ரம்யா தனது பெற்றோரின் வீட்டிற்கு திரும்ப வந்து விட்டார் என்பது விஜய் டிவிக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான்.

பின்னர் ஒரு வருடம் கழித்து விவாகரத்தும் பெற்று கொண்டார். திவ்யதர்ஷினியாவது சில வருடங்கள் கழித்து தான் விவாகரத்து பெற்றார். இந்நிலையில் 6 வருடம் கழித்து முதல் முறையாக தனக்கு ஏன் கணவரை பிடிக்காமல் போனது என்றும், ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்றுதற்கான காரணத்தையும் விஜே ரம்யா கூறியுள்ளார்.

இன்றுவரை ரம்யாவின் விவாகரத்துக்கு காரணம் அவர் திருமணத்திற்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்ததுதான் என பல செய்திகள் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லையாம். திருமணமான பத்து நாட்களுக்குள்ளேயே இருவருக்கும் செட் ஆகாது என முடிவு செய்துவிட்டார்களாம்.

மேலும் இருவரின் கருத்துக்களும் வெவ்வேறு விதமாக இருந்ததே இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணமாகும் என்றுள்ளார். அதனைத் தொடர்ந்து எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல் அமைதியாக திரும்ப அம்மா வீட்டுக்கே வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டோம் எனக் கூறியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகுதான் ரம்யா அதிகமாக திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here