பெல்ஜியத்திலிருந்து அஞ்சல் மூலமாக கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த எக்ஸ்டசி வகையிலான 18,000 போதை குளிசைகள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆசியாவில் கைப்பற்றப்பட்ட அதிக தொகையான போதை குளிசைகள் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதை குளிசைகளின் பெறுமதி 135 மில்லியன் ரூபாவாகும்.
விலங்குகளுக்கு உணவுகள் என்ற போர்வையில் போதை குளிசைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஹப்புத்தளையில் முகவரி ஒன்றுக்கே குறித்த போதை குளிசைகள் முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.