சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்த தடையாக அரசியல் அழுத்தம்: யாழில் சுகாதார வைத்திய அதிகாரியொருவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

சுகாதார நடைமுறைகளை செயற்படுத்த அரசியல் அழுத்தங்கள் தடையாகவுள்ளதென.காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி குற்றச்சாட்டியுள்ளார்.

சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை செயற்படுத்தும் போது சில உயர்மட்ட அரசியல் அழுத்தங்கள் காரணமாக தமக்கு இடர்பாடுகள் காணப்படுவதாக காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி யதுநந்தன்குற்றஞ்சாட்டினார்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு விசேட செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறிப்பாக காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட ஆலயங்களில் சுகாதார அமைச்சின் வழிகாட்டல் கமைய 50 பேர் மட்டுமே ஆலய உற்சவங்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே அதனை நாம் செயற்படுத்துகின்றோம். அவ்வாறு செயற்படுத்தும் போது ஒரு சில நபர்கள் தமது உயர்மட்ட அரசியல் அழுத்தங்களை பாவிப்பதாகவும் அதனால் நமக்கு இடையூறு ஏற்படுவதாகவும் இது தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அத்தோடு தொடர்ச்சியாக அநாமதேய தொலைபேசிகள் ஊடாக மிரட்டப்படுவதாக தெரிவித்ததோடு இந்த விடயம் தொடர்பில் பொலிசார் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here