கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகரின் உடமையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மரணித்த யாசகர் ஒருவரின்
பையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் பணம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த மூன்று
நாட்களாக கிசிச்சை பெற்று வந்த குறித்த நபர் இன்று மரணமடைந்துள்ளார்.
அவர் கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயம், வங்கிகளுக்கு முன்னாள் நின்று
யாசகம் பெற்று வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் மரணித்த பின்னர் அவர் வைத்திருந்து பழைய பைகளில் ஒரு இலட்சத்து
முப்பதாயிரத்துக்கு மேல் பணம் இருந்தமை வைத்தியசாலையால்
கண்டறியப்பட்டுள்ளது. உறவினர்கள் எவருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here