கொரோனா விதிமுறையை மீறியமைக்காக ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரிட்டன் அழகுராணி சாரா ஹொலண்ட், அபராதத்துடன் தப்பித்தார்.
பார்படோஸிற்கு காதலனுடன் சுற்றுலா சென்ற 25 வயதான சாரா, நேற்று நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டு, “முட்டாள்தனமான செயலில் ஈடுபட்டேன்“ என ஒப்புக் கொண்டார்.
அவர்கள் தங்கியிருந்த ஹில்டன் ஹோட்டலில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில், அவரது காதலன் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், யாருக்கும் தெரியாமல் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றனர்.
டிசம்பர் 29ஆம் திகதி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அந்த ஜோடி நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொண்டது. சாரா ஒரு வருட சிறையை எதிர்கொள்வார் என கூறப்பட்டாலும் 4,500 பவுண்ஸ் அபராதத்துடன் தப்பித்தார். 7 நாளுக்குள் அபராதத்தை செலுத்த தவிறினால், 9 மாத சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்.
அவரது காதலன் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.