ரூம் போட்டு தற்கொலை செய்த தொழிலதிபர்!

இரத்னபுரி பகுதியில் நன்கு அறியப்பட்ட இளம் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று இரவு (05) தம்புள்ளையில் உள்ள நிசங்கா சந்தியிலுள்ள ஓய்வு இல்லத்தின் அறையில் கண்டெடுக்கப்பட்டதாக தம்புள்ள பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியளவில் அவர் ஓய்வு இல்லத்திற்கு வந்துவிட்டதாகவும், மதியமளவில் தங்கியிருந்த அறை பொருத்தமில்லையென்றும், இன்னொரு பெரிய அறை வேண்டும் என்று கூறி அறையை மாற்றிவிட்டதாகவும் ஓய்வு இல்லத்தின் மேலாளர் தெரிவித்தார்.

இரவு உணவுக்கு முன்பதிவு செய்திருந்தார். இரவு 10 மணியளவில் விடுதி ஊழியர் உணவுடன் அறைக்குச் சென்றார். ஆனால் எந்த பதிலும் இல்லை. எனவே அவர் அறை வாசலில் ஒரு துளை வழியாகப் பார்த்தபோது, வர்த்தகர் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டார்.

மின்சார விசிறிக்கு கயிற்றைக் கட்டி தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நபர் ஏன் தம்புள்ளைகு வந்தார் என்பது இதுவரை தெரியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here