சர்ச்சைக்குரிய ரீசேர்ட்டை அணிய வேண்டாம்: யாழ் பல்கலைகழக மாணவர்களிற்கு அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்களின் பாவனைக்கென சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட ரீசேட்டுகளின் பின் புறத்தில் பல்கலைக்கழக இலட்சினை பொறிக்கப்பட்டமை தொடர்பாக இன்று சமூக ஊடகங்களில் வெளிவந்த கருத்துக்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இது தொடர்பில் துணைவேந்தர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த காணொலி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

ரீசேட்டின் முன்புறத்தில் பல்கலைக்கழகத்தின் இலச்சினையைப் பொறிப்பதற்கு முறையான அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும், ரீசேட் வடிவமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாகவே பின் புறத்தில் ஆங்கில எழுத்துகள் பொறிக்க நேர்ந்ததாகவும், அதற்காகத் தங்களது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் இனிவரும் காலங்களில் இந்த ரீசேட் அணிவதைத் தவிர்க்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ரீசேட்டின் பின்பகுதியில் பல்கலைகழக இலச்சினையில் இடம்பெறும் நந்தி சின்னம் இல்லாமல் ஆங்கில ஜே எழுத்து மட்டும் பெரிய எழுத்துருவில் பொறிக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here