சபையை இழந்த கோபம்- த.தே.கூ உறுப்பினர்கள் களேபரம்!

வவுனியா நகரசபையில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. சபையை இழந்த த.தே.கூவின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு, வவுனியாவில் ஏன் எம்மை கைவிட்டீர்கள் என அங்கு வந்திருந்த த.தே.கூவின் எம்.ஏ.சுமந்தரன், செல்வம் அடைக்கலநாதன், சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தர்க்கப்பட்டனர். சுமந்திரன் உடனடியாக அந்த இடத்திலிருந்து கிளம்பி சென்றுவிட்டார். சிவாஜிலிங்கத்துடன் சிறிது நேரம் தர்க்கம் நீடித்தது.

இதேவேளை, த.வி.கூட்டணிக்கு ஆதரவளித்த ஈ.பி.டி.பி உறுப்பினரையும் தூசண வார்த்தைகளால் திட்டி, முரண்பட்டனர்.

இதேவேளை, ஐ.தே.கவின் பெண் உறுப்பினரை ரிசாட் பதியுதீன் தரப்பினர் கடத்தி சென்றே ஆதரவாக வாக்களிக்க வைத்ததாக, ஐ.தே.கவின் வவுனியா அமைப்பாளர் அங்கு பரபரப்பு குற்றம் சுமத்தினர். ஆனால் அங்கு வந்த ரிசாட் பதியுதீனின் தம்பி அதை நிராகரித்து, குறிப்பிட்ட பெண் வேட்பாளரை ஊடகங்களிடம் பேச செய்தார். அந்த குற்றச்சாட்டை அந்த பெண்ணும் மறுத்தார். இதன்பின் ரிசாட் பதியுதீனின் தம்பிக்கும், ஐ.தே.கவின் அமைப்பாளருக்குமிடையில் கைகலப்பு ஏற்படும் நிலையேற்பட, அங்கிருந்தவர்கள் நிலைமையை சமாளித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here