வெறும் 4 படங்கள்: 36 கோடி ரூபாவிற்கு வீடு வாங்கிய இளம் நடிகை!

இந்திய திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார். ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விரைவில் இந்த படங்கள் வெளியாக உள்ளது. நடிகை ஜான்வி கபூர் மும்பையில் உள்ள முக்கிய பகுதியில் ரூபாய் 36 கோடிக்கு வீடு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வீட்டின் சதுர அடி 3456 என்றும் பத்திரச் செலவு மட்டுமே 78 லட்சம் ரூபாய் என்றும்
தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று மாடிகள் கொண்ட இந்த வீட்டை ஜான்வி கபூர் வாங்கி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாக பாலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர். ஏற்கனவே தனது தந்தை போனி கபூர் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வரும் ஜான்வி கபூர் புதிய வீட்டிற்கு விரைவில் குடியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நான்கு படங்கள் மட்டுமே நடித்த ஒரு நடிகை ரூபாய் 36 கோடிக்கு மும்பையின் முக்கிய பகுதிகளில் வீடு வாங்கி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் வாயடைத்து போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here