நான்கு கோவில்களில் வரிசையாக கைவரிசை காட்டிய கில்லாடி திருடர்கள்!

வவுனியா கந்தபுரம், தவசிகுளம் பகுதியில் நேற்றயதினம் இரவு நான்கு கோவில்களில் திருட்டுசம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றயதினம் இரவு குறித்த கோவில்களிற்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கதவினை உடைத்து உண்டியல்களை திருடிச்சென்றுள்ளதுடன், ஒலிபெருக்கி சாதனங்களையும் களவாடிச்சென்றுள்ளனர்

கந்தபுரம் பிள்ளையார் கோவில் மற்றும், அம்மன் கோவில்,பொன்னாவரசங்குளம் பிள்ளையார்கோவில், தவசிகுளம் வைரவர்,கோவில்களிலேயே குறித்த திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

சில கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தினை மாத்திரம் எடுத்து சென்றுள்ளதுடன், உண்டியல்களை ஆலய வளாகத்திலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

சம்பவங்கள் தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here