சாவகச்சேரியில் போராட்டம்!

கோவிட் 19 பெருந்தொற்றின் அபாயத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாப்பது தொடர்பான ஒரு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர் மற்றும் சிவில் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் சசிகலா ரவிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி இலங்கை ஜனாதிபதிக்கு ஒரு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்தார்கள்.

அம் மகஜரில் சிறையில் வாடும் கைதிகளில் 7 பேர் பெண்கள் என்றும் அவர்களில் ஒருவர் ஒன்றரை வயது குழந்தை ஒன்றின் தாய் எனவும் 14 வரையிலான தமிழ் அரசியல் கைதிகள் தொற்றுக்குள்ளாகியிருக்கும் விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் மனித உரிமைகள் ஆணையகம், பிரதமர் மகிந்த இராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here