சித்ராவின் கைப்பைக்குள் கஞ்சாவுமிருந்தது: இப்போது வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9 ஆம் திகதி தனியார் ஹோட்டல் ஒன்றில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் மரணம் தொடர்பாக வெளியான அறிக்கையில், சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டுள்ளது. எனினும், சித்ராவின் பெற்றோர் தரப்பில் அதை மறுத்து வருகிறார்கள். சித்ரா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் எனவும், இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, மறைந்த நடிகை சித்ராவின் கைப்பையில் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா அடைக்கப்பட்ட சிகரெட் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. சித்ராவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என்று அவரின் மாமனார் ஏற்கெனவே போலீசாரிடம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது போதை பழக்கமும் இருப்பது தெரியவந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்ராவுக்கு போதை பொருள் வாங்கி கொடுத்தது யார்? சித்ராவின் கணவர் ஹேம்நாத்துதான் சித்ராவுக்கு போதை பொருள் வாங்கி கொடுத்தாரா என்பது குறித்து தற்போது விசாரணை திசைமாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here