இரவு 10.30: போராட்டத்தில் ஈடுபட்டுள் மாணவர்களை நேரில் சந்தித்த துணை வேந்தர்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் முன்பாக இன்று உண்ணாவிரதத்தை ஆரம்பித்த வகுப்பு தடைவிதிக்கப்பட்டிருந்த மாணவர்களை, துணைவேந்தர் சிறிசற்குணராஜா சந்தித்து பேசினார்.

இன்று இரவு 10.15 மணியளவில் மாணவர்களின் போராட்ட இடத்திற்கு சென்ற துணைவேந்தர், இனிமேல் பல்கலைகழகத்திற்குள் ரௌடித்தனத்தில் ஈடுபடக்கூடாது என்ற கண்டிப்பான அறிவுரையை கூறி, வகுப்புத்தடை விலக்கப்பட்ட தகவலை கூறினார்.

மோசமான பகிடிவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட மாணவர்களிற்கே வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை இ்த மாணவர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here