வவுனியாவின் நிலை என்னவாகும்?

வவுனியா பட்டானிக்சூர் பகுதியில் கொரனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஒழுங்கையில் இருந்து 5 ஆம் ஒழுங்கை வரை அனைத்து பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளதுடன் எவரும் வெளியேற அனுமதிக்கப்படாத நிலையில் பொலிஸார் கடமையில் நியமிக்கப்பட்டுள்ளர்.

இந்நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குறித்த பகுதியிலேயே வசித்து வருகின்றனர்.

இச் சூழலில் குறித்த பகுதியில் இருந்து வருகை தந்து வர்த்தகத்தில் ஈடுபடுவர்களை வர்த்தக நிலையங்களை மூடுமாறு சுகாதார பகுதியினரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த அறிவுறுத்தல் செவிமடுக்கப்படாத நிலையில் வவுனியா நர்ப்பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டுள்து.
காலையில் இருந்து பட்டானிச்சூர் பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிப்பவர்களின் வர்த்தக நிலையங்கள் எவ்வாறு திறக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்குமப்பால் வவுனியா நகர்ப்பகுதியில் அதிகளவானோர் நடமாடி வருவதனால் வவுனியாவின் நிலை என்னவாகும் என்பதே மக்களின் அச்சமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here