யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளான மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் முன் பகுதியில் இன்று போராட்டம் ஆரம்பித்தது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாண பல்கலைகழகம் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கைகளில் வகுப்பு தடைவிதிக்கப்பட்ட மாணவர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் கலைப்பீடத்தில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்புபட்டு வகுப்பு தடைக்குள்ளான மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.