துவிச்சக்கர வண்டிக்கு காற்றடித்தவர் உயிரிழந்தார்!

துவிச்சக்கர வண்டிக்கு காற்றடித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (2) மாலை, வடமராட்சி, ஊறணி, பொலிகண்டி பகுதியில் நடந்துள்ளது.

காங்கேசமூர்த்தி ஞானமூர்த்தி (53) என்பவரே உயிரிழந்தார்.

வெளியில் செல்வதற்காக வீட்டில் துவிச்சக்கர வண்டிக்கு காற்றடித்த போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here