மேலும் 2 கொரோனா மரணம்!

நாட்டில் நேற்று மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியது.

மொத்த மரணங்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.

212ஆவது மரணம்
வெலிப்பன்னை பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான பெண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையிலிருந்து, கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (03) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர இருதய தொற்று மற்றம் கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.

213ஆவது மரணம்
கொழும்பு 15 (மட்டக்குளி/ மோதறை) பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து, கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (03) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, இருதய நோய் நிலை மற்றும் வலிப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here