கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் பல்லவராயன்கட்டு வேரவில் பிரதான
வீதி போக்குவரத்து செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என பிரதேச
மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் ஆங்காங்கே நீர் நிரம்பியிருப்பதாகவும், அதனூடாக
பாரவூர்திகள் சென்று வீதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொது
மக்களின் நாளாந்த போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முக்கியமாக குறித்த வீதியின் ஊடாக நோயாளர் காவு வண்டி செல்ல முடியாததன்
காரணமாக வேரவில் வைத்தியசாலைக்கு லாண்ட்குரோஸ் வாகனம் ஒன்று
பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருந்த போதும் குறித்த வாகனத்தின் ஊடாக
நோயாளிகளை வேரவில் வைத்தியசாலையிலிருந்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாது நிலையும் ஏற்பட்டுள்ளது.
வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு, பலாவி போன்ற கிராமங்களில் வாழும் மக்கள்
நாளாந்தம் பயன்படுத்தப்படும் குறித்த வீதி இவ்வாறு மிக மோசமாக
பாதிப்படைந்துள்ளமையால் பொது மக்களின் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளனர்.
எனவே உரிய தரப்பினர் பொது மக்களின் இலகு போக்குவரத்துக்கு ஏற்ற வகையில்
ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.