இலங்கையின் காதல் மன்னன் கைது: தொலைபேசியில் 100 பெண்களின் அந்தரங்க படங்கள்!

சுமார் 100 பெண்களின் நிர்வாண புகைப்படங்களை தனது கையடக்க தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த காதல் மன்னன் ஒருவரை கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர் பணியக பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதான காதல் மன்னன் நீதிமன்ற பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இளம்சட்டத்தரணியொருவரை காதலித்து நிர்வாணமாக படம் பிடித்து, மிரட்டிய குற்றச்சாட்டில் அவர் கைதான போதே, அவரது காதல் லீலைகள் அம்பலமாகின.

அவர் தொடர்பில் கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர் பணியக பிரிவு பொலிசார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த இந்த நபர், பாடசாலை கல்வி முடிந்த பின்னர் குறிப்பிடத்தக்க வேலையெதுவும் கிடைக்காத நிலையில், தனது அழகான தோற்றத்தின் மூலம் ஏராளம் பெண்களை வலையில் வீழ்த்தியுள்ளார்.

ஒரே சமயத்தில் 5 இற்கும் அதிகமான பெண்களை சில சந்தர்ப்பங்களில் காதலித்துள்ளார். பாலியல் உறவிற்காகவும் பெண்களுடன் பழகி வந்துள்ளார். காதலிக்கும் வசதியான பெண்களின் பண உதவியில் நீண்டகாலமாக வாழ்க்கை நடத்தி வந்த ஆசாமி, கொழும்பில் நீதிமன்றமொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்ற தொடங்கிய பின்னரும் கைவரிசையை தொடங்கியுள்ளார்.

சட்டக்கல்வியை முடித்து நீதிமன்றத்திற்கு சட்டத்தரணியாக நுழைந்த அழகிய இளம் யுவதியொருவரை குறிவைத்து காய்களை நகர்த்தியிருந்தார். யுவதியின் கைப்பையை வாங்கி வைப்பது, வணக்கம் செலுத்துவது, அவர் அழகாக இருக்கிறார் என தினமும் புகழ்வது என காதல் வலையை விரித்துள்ளார்.

நாளடைவில் இருவரும் காதலர்களாகினர்.

சடடத்தரணியான யுவதி, காதலனிற்கு தாரளமாக பணம் செலவிட்டுள்ளார். காதலன் புதிய தொழில் தொடங்க, வங்கிக்கடனிற்கும் விண்ணப்பித்திருந்தார்.

இந்த காலகட்டத்தில் காதலியை விடுதிகளிற்கு அழைத்து சென்று தங்கியுள்ளார் காதலன். அப்போது காதலியின் நிர்வாண படங்களை எடுத்து வைத்துள்ளார்.

சில காலத்தில் காதலனின் சுயரூபம் பற்றிய தகவல்கள் கிடைக்க ஆரம்பித்ததும், அவருடனான சகல தொடர்புகளையும் சட்டத்தரணி யுவதி நிறுத்தியுள்ளார். நீதிமன்றத்திலும், அந்த இளைஞனை கண்டு கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது காதலை தொடரும்படி கோரியிருக்கிறார்.

எனினும், அவர் பற்றிய தகவல்களை தான் அறிந்துள்ளதாகவும், ஏமாற்றப்பட்டு விட்டேன், இனி எந்த தொடர்பும் வைத்திருக்க மாட்டேன் என யுவதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தன்னுடனான உறவை நிறுத்தினால் அவரது அந்தரங்க படங்களை இணையத்தளத்தில் வெளியிட போவதாக காதலன் மிரட்டியுள்ளார். யுவதிக்கு குறிப்பிட்ட அவகாசமொன்று வழங்கி, குறிப்பிட்ட இடமொன்றிற்கு வந்து தனக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்த வேண்டுமென்றும், அதை செய்யாவிட்டால், அவரது நிர்வாண படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றுவேன் என மிரட்டியுள்ளார்.

எனினும், இந்த மிரட்டலிற்கு அஞ்சாமல், கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தில் அந்த யுவதி முறைப்பாடு பதிவு செய்தார்.

உடனடியாக செயற்பட்ட பொலிசார் அந்த காதல் வெறியனை கைது செய்தனர். அவனது தொலைபேசியை ஆராய்ந்ததில் சுமார் 100 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் அதில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதில் பெரும்பாலானவர்கள் காதலித்து ஏமாற்றப்பட்டவர்கள்.

அழகான தோற்றம், ரிப்ரொப் உடை, நுனி நாக்கு ஆங்கிலம் என்றால் உடனே காதலிக்கும் பெண்களிற்கு எச்சரிக்கை மணியடிக்கும் சம்பவம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here