பொரளை தபால் நிலைய பொறுப்பதிகாரிக்கும், ஊழியர்களிற்கும் கொரோனா!

பொரளை தபால் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நிலையத்தில் பணியாற்றும் ஏனைய  மூன்று ஊழியர்களுக்கு  தொற்று ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் அரியரத்ன தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து பொரளை தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர், தபால் அலுவலகம் அடுத்த திங்கட்கிழமை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக கொழும்பு மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடிதங்கள் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அஞ்சல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்ட பின்னர் தபால் ஊழியர்களின் தனிமைப்படுத்தலின் காரணமாக தபால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் அரியரத்ன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here