கடந்த ஆண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, 479 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
இவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளாகும். உள்நாட்டு துப்பாக்கிகள் 250 உள்ளன.
சோதனையின்போது 126 ஷொட்கன்கள், 15 கைத்துப்பாக்கிகள் மற்றும் 33 டி -56 தாக்குதல் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக எஸ்.டி.எஃப் தெரிவித்துள்ளது.
477 சோதனைகளில் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன், 355 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.